மும்பை, பெங்களூரு போல சென்னையிலும்.. இனி இது இருக்காது

x

டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரைப் போல, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக, ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (Bruhat Bangalore Mahanagar Palike - BBMP) உடன் இணைந்து, ஒரு வாகனத்தை ஒப்பந்த அடிப்படையில் சென்னைக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. Suction sweeper மூலம், முதலில் சாலை சுத்தம் செய்து, தூசி மற்றும் குப்பைகள் அகற்றப்படும். அதைத் தொடர்ந்து, அந்த இயந்திர வாகனமானது சாலையில் சமமாக சுத்திகரிப்பான நீரைத் தெளித்து தூசியை கட்டுப்படுத்தும். பிரதான சாலைகளில் மனிதர்களைக் கொண்டு துப்புரவு பணிகள் செய்வதற்கு பதிலாக, இந்த இயந்திர வாகனங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், முக்கிய சாலைகளில் தூய்மை பணிக்காக, 20 இயந்திரங்களை கொள்முதல் செய்யும் முன்மொழிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்