``வந்தாச்சு ஜூன் மாதம்..’’ வானவில் கொடி ஏற்றி சென்னையில் உற்சாகம்

x

Chennai LGBTQ | ``வந்தாச்சு ஜூன் மாதம்..’’ வானவில் கொடி ஏற்றி சென்னையில் உற்சாகம்

சுயமரியாதை மாதத்தை கொடியேற்றத்துடன் துவங்கிய பால்புதுமையினர்...

சென்னை, அமைந்தகரையில் பால்புதுமையினர் தங்களை அடையாளப்படுத்தும், சுயமரியாதை மாதத்திற்கான வானவில் வர்ணகொடியை ஏற்றி கோஷங்கள் எழுப்பினர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் சர்வதேச அளவில் சுயமரியாதை மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜூன்,ஜூலை மாதங்களில் சுயமரியாதை பேரணியும் நடத்தப்படும். அதன்படி தற்போது வானவில் வர்ணகொடியை ஏற்றிய பால்புதுமையினர், சுயமரியாதை மாதத்தினை அனைவரும் ஒன்றினைந்து கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், வானவில் சகோதரர்கள் என்ற சொற்பதத்தை சமூக வலைதளங்களில் சரியான புரிதலுடன் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்