Thiruppuvanam Lockup Death | அஜித் வழக்கில் எதிர்பாரா வேகம் காட்டும் நீதிபதி - 11 மணி நேரத்தில்

x

காவல் நிலைய விசாரணையின்போது அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு நபர்களிடம், விசாரணை அதிகாரியான, மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பல மணி நேரத்தை கடந்து விசாரணை நடத்தினார்.

திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் காலை 10.45 மணிக்குத் தொடங்கிய விசாரணை, பல மணி நேரத்தைக் கடந்து நடைபெற்றது.

இதில், அஜித் குமாரை தனிப்படைபோலீசார் தாக்கிய சம்பவத்தை வீடியோ எடுத்த கோயில் பணியாளர் சத்தீஸ்வரன், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரின் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், கோவில் பாதுகாப்பு அலுவலரும் சிசிடிவி கண்காணிப்பாளருமான சீனிவாசன், அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்