Divorce| GR Swaminathan| 67 வயது நபரின் விவாகரத்து வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் அதிரடி கருத்து

67 வயது நபரின் விவாகரத்து வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் அதிரடி கருத்து

``Ad-ல் வரும் நாய் போல கணவனுடன் மனைவி செல்ல வேண்டும் என்பது..’’ - 67 வயது நபரின் விவாகரத்து வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் அதிரடி

கணவனுடன் மனைவி வசித்தால் தான் தவறான நடத்தைகள் நிகழாது என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவர், தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறி விவாகரத்து கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன் வேலை தேடி மும்பை சென்றபோது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும், கணவனுடன் வசித்தால் தான் தவறான நடத்தைகள் நிகழாமல் இருக்கும் என்றும் கூறி விவாகரத்து மனுவை நிராகரித்தார் இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ்கோர்ட்டின் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவித்தது மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், விளம்பர காட்சியில் வரும் நாய் போல கணவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் மனைவியும் செல்ல வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்றனர். மேலும், கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் இவர்களுக்கு இடையே உறவைப் புதுப்பிக்க சாத்தியமில்லை என்பதால், தம்பதியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். அத்துடன், மனைவிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கணவருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com