Joy Crizildaa Post | மாதம்பட்டி ரங்கராஜ் விஷயம் - ஜாய் கிரிசில்டா போட்ட உலுக்கி எடுக்கும் பதிவு

x

Joy Crizildaa Post | மாதம்பட்டி ரங்கராஜ் விஷயம் - ஜாய் கிரிசில்டா போட்ட உலுக்கி எடுக்கும் பதிவு

புகார் மீது நடவடிக்கை எப்போது? - ஜாய் கிரிசில்டா கேள்வி

மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்த ஜாய் கிரிசில்டா, நடவடிக்கை எடுப்பது எப்போது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ஜாய் கிரிசில்டா.., மேலும் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும், பார்வையற்ற தனது தாயாருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக" எனும் வாசகத்தை வைத்து, ஜாய் கிரிசில்டா பதிவிட்டிருப்பது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்