காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை - நேரடியாக இறங்கி அடித்த ஐ.நா.
காசாவில் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் படுகொலை- ஐ.நா. கண்டனம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்நிலையில், இந்த படுகொலைகள் குறித்து சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வலியுறுத்தினார். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 242 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி, பாதுகாப்பு உணர்வுடன் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
