60,000 பேருக்கு கிடைக்கப்போகும் வேலை.. தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்
தமிழகத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாகிறது என்றும் அவர் கூறினார். நாங்கள் எங்கள் முதலீட்டாளர்களை முதலீட்டின் அளவை வைத்து மதிப்பிடுவதில்லை, தரத்தை வைத்து மதிப்பிடுகிறோம் என்றும் அவர் கூறினார்.
Next Story
