

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதிமுக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வர்த்தகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், பணமதிப்பிழப்பு காரணமாக 8 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.