ஜெயக்குமார் இறந்த இடத்தில்.. 24 மணி நேரமும்..

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில், நெல்லை கரைச்சுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு போலீசார் தடுப்பு வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் தான், கடந்த 4 ஆம் தேதி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தோட்டத்தை தங்களின் முழுக் கட்டுபாட்டில் கொண்டு வந்து தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com