ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், சித்த மருத்துவக் கல்லூரி ஊழியர் வீட்டில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவு இல்லத்துக்கு அருகில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் நிர்வாக அலுவலராக பணிபுரியும் முத்துபெருமாள் என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப்பணம், 180 சவரன் தங்க நகைகளை சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில், நகை மற்றும் பணம் கொள்ளைபோனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம், ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், ஆய்வாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து ரகசியமாக புலன் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
