ஒரே பகுதியில் ஒரே மாதத்தில் 9 வீடுகளில் நகை திருட்டு - அதிர வைத்த கொள்ளையர்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 22 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்‌. கொண்டையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. காலையில் எழுந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் திருட்டு நடைபெற்று இருப்பது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் , இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தெள்ளார் பகுதியில் ஒரே மாதத்தில் மட்டும் ஒன்பது வீடுகளில் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்