சென்னை வந்த 2 ரயில்களில் ஒரே பகுதியில் ஒரே பாணியில் நகை கொள்ளை..ஸ்லீப்பர் கோச்களில் பயங்கரம்

x

ஓடும் ரயில்களில் ரயில் கொள்ளை

சென்னை வந்த இரண்டு ரயில்களில் ரயில் கொள்ளையர்கள் துணிகர சம்பவம்

நேற்று இரவு ஹைதராபாத் டு சென்னை ஹைதராபாத் டு தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் ரயில் கொள்ளையர்கள் ரயிலை நிறுத்தி கொள்ளை சம்பவம்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிங்கராயகொண்டா மற்றும் டெட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் எண் 12604 (ஹைதராபாத்- சென்னை) இல் 0120 மணியளவில் S-2, S 4, S-5, S-6, S-7 பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.

பயணிகள் விழித்துக் கொண்டு கொள்ளையர்களைப் பிடிக்க முற்பட்டபோது கொள்ளையர்கள் ரயிலை நிறுத்தி கற்களால் பயணிகளை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

அதே இடத்தில் ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த 12760 விரைவு ரயிலில் மீண்டும் கொள்ளையர்கள் இதேபோலையில் கொள்ளையடித்து பயணிகள் மீது கற்களை வீசி தப்பி சென்றனர்.

இரண்டு ரயில்களிலும் மொத்தம் எவ்வளவு பயணிகளிடம் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர் என்பது குறித்து ஆந்திர மற்றும் சென்னை ரயில்வே போலீசார் விசாரணை.

இரண்டு நபர்கள் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் இரண்டு ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை மற்றும் தாம்பரம் வந்தடைந்தது.

இரண்டு ரயில்களில் ரயில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்த சம்பவம் ஆனது ஆந்திரா மற்றும் தமிழக ரயில்வே போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்