பேருந்தில் ஏறும் போது இருந்த நகை இறங்கும் போது இல்லை - கண்ணீர் விட்டு அழுத பெண்

மயிலாடுதுறையில் பெண்ணிடமிருந்து 22 சவரன் தங்க நகைகளை திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர். சோழம்பேட்டையை சேர்ந்த சத்யா என்பவர் பந்தநல்லூர் செல்வதற்காக, மயிலாடுதுறையில் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் அவர் தனது கைப்பையை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த 22 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது. இதனையடுத்து, தனியார் பேருந்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிடப்பட்டது. இருப்பினும் நகைகள் கிடைக்காத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com