"ஒரு மணி நேரத்திற்கு 2500 ரூபாய் வாடகை" கோரிக்கை வைத்த JCB உரிமையாளர்கள்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்த கோரி, 80-க்கும் மேற்பட்ட ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதிரி பாகங்கள், எரிபொருள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஜிஎஸ்டி, மெக்கானிக் சார்ஜ், வெல்டிங் செலவு என அனைத்து செலவுகளும் உயர்ந்த நிலையில், உரிமையார்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகையை உயர்த்த கோரி, வெங்களாபுரம் பகுதியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். மேலும் இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகை வாங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் வைத்தனர்
Next Story
