

சிபிசிஐடி எஸ்.ஐ உலக ராணி தலைமையிலான, ஜெயராஜ், பென்னிக்ஸின் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், உறவினர்களிடம் அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களுடனான விசாரணையில் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். இதனிடையே கடைவீதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், எஸ்.ஐ சரவணன் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விரைந்தனர்.