"தமிழ்நாட்டில் வால்மார்ட் வராமல் தடுத்தவர் ஜெயலலிதா" - விக்கிரமராஜா

x

தமிழ்நாட்டில் வால்மார்ட் வராமல் தடுத்தவர் ஜெயலலிதா"

தமிழ்நாட்டிற்குள் வால்மார்ட் வராமல் தடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று விக்கிரம ராஜா தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற தொழில் வர்த்தகர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருச்சியில் அமையவுள்ள டி-மார்ட் வணிக கட்டடத்தை முற்றுகையிட்டு வரும் 30ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார். கேரளாவில் வணிக வளாகங்களுக்கு அனுமதி தராமல், வியாபாரிகளை பாதுகாக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்