ஜெயலலிதாவின் பிறந்த நாள் - அண்ணன் மகன் தீபக் மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரது அண்ணன் மகன் தீபக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com