ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஓட்டுநர் சுரேஷ்குமார், ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
Published on

ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ( card 1 ) செப்டம்பர் மாதம் 22 ந்தேதி, போயஸ் தோட்ட இல்லத்தில் எந்த நிலையில் ஜெயலலிதா இருந்தார், யாரெல்லாம் உடன் இருந்தார்கள் என்பது போன்ற கேள்விகளை ஆணைய வழக்கறிஞர்கள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுரேஷ்குமார், சோபாவில் இருக்கையில் ஜெயலலிதா அமர்ந்து இருந்தததாகவும் அரை மயக்க நிலையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் ஏற்றியதாகவும் கூறினார். அப்போது சசிகலா, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை படிகள் வழியாக இறக்கும் போது, மருத்துவர் சிவக்குமார் மருத்துவமனை போகிறோம் என சொல்ல, அவர் தலையை மட்டும் ஆட்டினார் என சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், 2016 செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை செல்லும் வரை நடந்த நிகழ்வுகள் குறித்து பிறர் அளித்த வாக்குமூலத்துக்கும், சுரேஷ்குமார் அளித்த வாக்குமூலத்துக்கும் பல்வேறு முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஆணையத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த சசிகலாவும், மருத்துவர் சிவக்குமாரும் அளித்த வாக்குமூலத்தில், 2016 செப்., 22ம் தேதி அன்று கார்டனில் ஜெயலலிதா கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் சினேகா ஸ்ரீ மற்றும் ஜெயலலிதா கார் ஓட்டுனர் கண்ணன் ஆகியோர் ஜெயலலிதா சேரில் அ்மர்த்தப்பட்டிருந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் சுரேஷ்குமாரோ சோபாவில் அமர்ந்திருந்தாக கூறி உள்ளார். இப்படி மூன்று விதமான முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல, மருத்துவமனைக்கு செல்கிறோம்' என மருத்துவர் சிவக்குமார் ஜெயலலிதாவிடம் சொன்னதாக, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலத்தில் அந்த தகவல் இல்லை. மாறாக அப்பல்லோ மருத்துவமனையில் தான் தன்னிடம் எங்கே இருக்கிறோம் என ஜெயலலிதா கேட்டதாக கூறியுள்ளார்.

பாதுகாப்பு வீரர் பெருமாள் இரண்டாவது ஆம்புலன்சில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் உள்ள நிலையில், அவர் ஜெயலலிதாவை அழைத்து சென்ற ஆம்புலன்சில் வந்தார் என ஓட்டுனர் சுரேஷ்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com