``காத்திருந்து காத்திருந்து''.. இன்னுமா ஜனவரி முடியல - மீம் வெளியிட்டு புலம்பிய கூகுள்
2025-ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட நாட்களாகியும் ஜனவரி மாதம் முடியாமல் உள்ளதாக, இணையவாசிகள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். ஏராளமான விடுமுறை நாட்கள், குறைவான வேலை நாட்கள் என கொண்டாட்டமாக இருந்தாலும், தற்போதுதான் ஜனவரி மாதம் முடிவுக்கு வரவுள்ளதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கூகுள் நிறுவனமும் எக்ஸ் தளத்தில் மீம் பதிவிட்டுள்ளது. அதில் 2025-ஆம் ஆண்டை ஜனவரியில் தொடங்கினோம்.. இன்னமும் ஜனவரியிலா இருக்கிறோம்? என்ற வாசகத்துடன் கூகுள் நிறுவனமும் புலம்பியுள்ளது.
Next Story