ஜெ.அன்பழகன் மறைவு மூலம் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலி இடம் 3ஆக உயர்வு

ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது.
ஜெ.அன்பழகன் மறைவு மூலம் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலி இடம் 3ஆக உயர்வு
Published on

இந்தாண்டு துவக்கத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி மரணமடைந்தார். இதை அடுத்து சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியானது. தற்போது ஜெ.அன்பழகன் காலமானதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் காலி இடங்கள் 3ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 98ல் இருந்து 97ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 124ஆகவும், திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 97ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், சுயேட்சை, நியமனம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தலா ஒன்றாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com