Jananayagan Case Judgement | ஜனநாயகன் தீர்ப்பு - உறுதியான தேதி

x

ஜனநாயகன் வழக்கில் ஜனவரி 27ம் தேதி தீர்ப்பு

விஜய்யின் ஜனநாயகன் பட சென்சார் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வருகிற ஜனவரி 27ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. வழக்கு விசாரணையில் படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து, தணிக்கை குழு தலைவர் இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும்,

மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார்களை தங்களுக்கு வழங்காமல், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வருகிற ஜனவரி 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்