ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, வெளி நபர்களால் வன்முறை ஏற்பட்டது என பலர் தெரிவித்துள்ளதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்
ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்
Published on
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் 9ஆம் கட்ட விசாரணையை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தொடங்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் மட்டும் விசாரணைக்காக 188 பேருக்கு சம்மன் கொடுக்கப்பட்டதாகவும் 119 பேர் ஆஜராகி விளக்கம் தந்ததாகவும் தெரிவித்தார். மதுரையில் இன்னும் 6 மாதம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும் 8 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை நடந்த விசாரணையில், காவல்துறைக்கு ஆதரவாக பலர் சாட்சியம் அளித்துள்ளதாகவும், வெளி நபர்களால் தான் வன்முறை நிகழ்ந்தாக அவர்கள் கூறியதாகவும் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com