Jailer 2 | Rajinikanth | Latha Rajinikanth | `ஜெயிலர்2' ரிலீஸ்.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய லதா ரஜினி

`ஜெயிலர்2' ரிலீஸ்.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய லதா ரஜினி

Jailer 2 | Rajinikanth | Latha Rajinikanth | `ஜெயிலர்-2' ரிலீஸ்.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய லதா ரஜினிகாந்த்

#Jailer2 #Rajinikanth #LathaRajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் "ஜெயிலர் 2" ’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினி ரசிகர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். லதா ரஜினிகாந்தின் மக்கள் மேடை இயக்கம் மற்றும் ரஜினி ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நலிவடைந்த இருவருக்கு முச்சக்கர வண்டிகளும், பத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சீருடைகள் மற்றும் நிதியுதவியும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய ரசிகர்கள், ஜெயிலர் 2 படத்தை வரவேற்கும் விதமாக பேனர் கலாச்சாரத்தைத் தவிர்த்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவதாகத் தெரிவித்தனர். மேலும், ரஜினிகாந்த் இதுவரை இரண்டாம் பாகத் திரைப்படங்களில் நடித்ததில்லை என்றும், தற்போது "ஜெயிலர் 2"-வில் நடித்திருப்பது படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com