ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி: 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் வர வாய்ப்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் தள்ளிப்போயுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி: 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் வர வாய்ப்பு
Published on

பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் கருவூல பணியாளர்களும் அடக்கம். இதனால் சம்பளம் கணக்கிட்டு, வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக 31 ந்தேதியே வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் சம்பளப்பணம் இன்னும் வரவில்லை. அநேகமாக வரும் 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவல்துறை அமைச்சகப் பணியாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், போலீசாருக்கும் மாத சம்பளம் தள்ளிப்போயுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com