நாள் குறித்த ஜாக்டோ-ஜியோ... வெளியான அறிவிப்பு | Jacto-Geo
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16 மற்றும் 25-ஆம் தேதிகளில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை பட்டதாரி தலைமையாசிரியர்களின் ஊதிய பிரச்சனைகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதை வலியுறுத்தி பிப்ரவரி 16ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
