"அந்த மனசுதான் சார்.."- சொன்னதை செய்து காட்டிய டிஐஜி வருண்குமார்

x

ஆதரவற்ற குழந்தைகளை படம் பார்க்க அழைத்து சென்ற டிஐஜி வருண்குமார்

திருச்சியில் ஆதரவற்ற குழந்தைகளை டிஐஜி வருண்குமார் தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து சென்றார். திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை டிஐஜி வருண்குமார் திறந்து வைத்தார். அப்போது குழந்தைகளின் மத்தியில் பேசிய அவர் தியேட்டரில் சென்று திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார். அதன்படி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் காப்பாளர்கள் என 60 பேரை தனது சொந்த செலவில் படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து சென்று, குழந்தைகளுடன் சேர்ந்து தானும் படம் பார்த்து மகிழ்ந்தார். மேலும் அவர்கள் கேட்ட பொம்மைகள் மற்றும் விளையாடுப்பொருட்களையும் வாங்கிக்கொடுத்து குழந்தைகளின் புன்னகையை பார்த்து மகிழ்ச்சியடந்தார்.


Next Story

மேலும் செய்திகள்