Jason Sanjay | Sigma | CM Vijay | "அப்பா தான்.." - `சிக்மா' ப்ரொமோஷனில் மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
"அப்பா தான்.." - `சிக்மா' ப்ரொமோஷனில் மனம் திறந்த ஜேசன் சஞ்சய் முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும், “சிக்மா“ படத்தின் ப்ரோமோஷனில் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து, தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா“ திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். லைகா தயாரிப்பில், தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்பு தாசன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிக்மா படம் தொடர்பாக பங்கேற்ற பேட்டியில், ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவருடன் நடிக்க யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு; அப்பா விஜய்தான் முதலில் நினைவுக்கு வருவதாகவும், இருவரும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சஞ்சய் கூறினார். மேலும், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த சஞ்சய், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு போன் செய்து பிராங்க் செய்வது வழக்கம் என்றும், டீன் ஏஜ் வயதில் பைலட் அல்லது கிரிக்கெட் வீரராக வர விரும்பியதாகவும் தெரிவித்தார். மேலும், தனது அப்பா முதல் ஐபிஎல் சீசனின் விளம்பரத் தூதராக இருந்ததாக கூறிய சஞ்சய், அவர்தான் தன்னை ஐபிஎல் போட்டிக்கு அழைத்துச் சென்றதாகவும், வளர வளர திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். முதல்வர் விஜய், சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்குப் பிறகு பெற்றோர் குறித்து மௌனம் காத்த ஜேசன் சஞ்சய், தற்போது தந்தை விஜய் குறித்து பேசி வருவது கவனம் பெற்றுள்ளது
