"ஒன்றரை மணி நேரம் ஆச்சு, இன்னும் சாப்பாடு வரல.." - அரசு விழாவில் தூய்மை பணியாளர்கள் அலைக்கழிப்பு

x

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் பல மணிநேரம் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விழாவில், 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளும், தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர். விழா முடிவில், சிறப்பு விருந்தினர்கள் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் தங்களுக்கு உணவு வழங்கவில்லை என்று தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்