ரூ. 6 லட்சம் செலவில் கண்மாய், வாய்க்கால்களை தூர்வாரிய ஐ.டி. ஊழியர்கள்

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது.
ரூ. 6 லட்சம் செலவில் கண்மாய், வாய்க்கால்களை தூர்வாரிய ஐ.டி. ஊழியர்கள்
Published on

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தை பலர் கைவிட்ட நிலையில், ஐநூறு ஏக்கரில் செய்துவந்த விவசாயம் 50 ஏக்கராக சுருங்கியது. இதனை மீட்டெடுக்க ஒன்றிணைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மென்பொருள் துறை இளைஞர்கள், கிராமத்து முதியவர்களின் ஆலோசனைப்படி, கண்மாய் மற்றும் 17 கிலோ மீட்டருக்கு நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரினர். குடிமராமத்து பணியால், கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தரிசு நிலங்கள், மீண்டும் விவசாய நிலங்களாக மாறிவருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com