ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை அல்ல நாய்கள் தான்

x

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டார் பாளையத்தில் ஆடுகளை வேட்டையாடுவது சிறுத்தை அல்ல நாய்கள் தான் என புகைப்படத்தை வெளியிட்டு வனத்துறையினர் விளக்கமளித்துள்ளனர். செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது விவசாய நிலத்தில் 18 க்கும் ஏற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று விட்டதாக புகார் எழுந்த நிலையில், அதே இடத்தில் கோழி ஒன்றைக் கட்டி உளவு பார்த்தபோது, நாய்கள் கூட்டமாக வந்து கோழியை பிடித்து சென்றது தெரியவந்தது. இதன் மூலம் ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை அல்ல நாய்கள் தான் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்