மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. குழும நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை
Published on

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த எஸ்.பி.கே. குழுமத்தின் உரிமையாளர் செய்யாத்துரை. தமிழகம் முழுவதும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலையின் சாலை மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை சோதனையை தொடங்கினர்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத 160 கோடி ரூபாயும், 100 கிலோ தங்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நெளம்பூர், தாம்பரம், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள செய்யாதுரையின் உறவினர்கள் வீடுகளில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போயஸ் கார்டனில் உள்ள செய்யாதுரையின் மகன் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. மற்ற இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com