தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல்?

வருமான வரித்துறை - பறக்கும் படையினர் இணைந்து சோதனை
தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல்?
Published on

கோவை தனியார் புகைப்பட நிறுவனத்தில் வருமான வரித் துறையினரின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை - திருச்சி சாலையில் சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட தனியார் புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முறைகேடான பணம் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருமான வரி துறையினருடன் இணைந்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கடையின் உரிமையாளர், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தையும் சமர்ப்பித்ததாகவும், அதனை ஆய்வு செய்தவர்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி சென்று விட்டதாகவும் புகைப்பட நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com