``ஆப்ரேஷன் சிந்தூரை இந்துத்துவா அஜெண்டாவாக மாற்றுவதை ஏற்க முடியாது'' - திருமா
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிலர் இந்துத்துவாவின் அஜெண்டாவாக மாற்ற முயற்சிப்பதை ஏற்க இயலாது என்று ராணிப்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அவர், பாரதிநகரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதை வரவேற்பதாக குறிப்பிட்டார். மேலும் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான் என்றும், இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களுக்கு எதிராக வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார். .
Next Story