ஜில்லுனு அடிக்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
பத்தாம் தேதி வரையிலும், 13ம் மற்றும் 15 ஆம் தேதியிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடைப்பட்ட நாட்களான 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
