ஆவடி : 50 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு போன 1500 ஏக்கர் ஈசா ஏரி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஈசா ஏரி, சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் கடும் வறட்சி கண்டுள்ளது.
ஆவடி : 50 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு போன 1500 ஏக்கர் ஈசா ஏரி
Published on
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஈசா ஏரி, சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் கடும் வறட்சி கண்டுள்ளது. 12 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி, 50 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி அடைந்து பொட்டல் காடாக காட்சி அளிக்கிறது. ஆவடி முதல் சென்னை அண்ணா நகர் வரை உபரி நீர் கால்வாய் வழி தொடர்புடைய திருநின்றவூர் ஈசா ஏரி மூலம், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வந்ததாக கூறும் மக்கள், 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி கண்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். நீர் சேகரிக்க ஏதுவாக உடனடியாக ஏரியை தூர்வாரி வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com