Isha Gramotsavam | ஆக.16ம் தேதி தொடங்கும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி

x

Isha Gramotsavam | ஆக.16ம் தேதி தொடங்கும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி

பாரதத்தின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டு திருவிழாவான ‘ஈஷா கிராமோத்சவம் - 2025’ விளையாட்டு போட்டிகள் வரும்​ 16ம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டு விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்டோர் விளையாட இருக்கின்றனர். முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 6 மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ஆம் தேதி, கோவை ஈஷா மையத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே 5 லட்சம், 3 லட்சம் என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்