அனுமதி பெற்றே ஈஷா தகன மேடை அமைப்பு - கோவை ஆட்சியர்
கோவை இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உரிய கிராம பஞ்சாயத்துகளின் தீர்மானம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகே தகன மேடை கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய கோரி இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த எஸ்.என்.சுப்ரமணியம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மற்ற எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க ஏதுவாக விசாரணையை தள்ளிவைத்தனர்
Next Story
