உங்க குழந்தைக்கு 7 வயசு ஆச்சா? - அப்போ லேட் பண்ணாம உடனே இத பண்ணுங்க

x

குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

  • 7 வயதை அடைந்த குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிக்குமாறு, பெற்றோர்களுக்கு ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
  • பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் விவரங்களை எந்தவொரு ஆதார் சேவை மையம் அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்திலும் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 5 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தையின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும்,
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தையின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் ஆதார ஆவணங்களை வழங்குவதன் மூலம் ஆதாரில் இணைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் சேர்க்கைக்கு, அவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை 5 வயதை அடையும் போது, கைரேகைகள், கருவிழி, புகைப்படம் ஆகியவை அவரது ஆதாரில் கட்டாயமாகப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும்
  • 5 வயது முதல் 7 வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தையின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு கட்டணம் ஏதுமில்லை என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • 7 வயதுக்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 100 ரூபாய் என்றும்,
  • குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை சரியான நேரத்தில் செய்வது அவசியமான தேவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • 7 வயதுக்குப் பிறகும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி, ஆதார் எண் செயலிழக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்