Chennai Rain | 1 மணி நேர மழைக்கே இப்படியா..? - தண்ணீரில் தவித்த வட சென்னை மக்கள்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பகுதியில் 1 மணி நேரம் பெய்த மழைக்கே, சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிய நிலையில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வடசென்னை பகுதியில் இரவு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. குறிப்பாக காசிமேடு, எண்ணூர், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
