வயிரா ஸ்பீட் பிரேக்கரா?

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கின்னஸ் சாதனை முயற்சிக்காக இளைஞர் ஒருவர், 150 முறை இருசக்கர வாகனத்தை தனது வயிற்றில் ஏற்றியுள்ளார். சதீஷ் என்ற இளைஞர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தனது வயிற்றின் மீது 150 முறை இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார். சேரம்பாடி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்ததாக தெரிவித்துள்ள சதீஷ், சாதனை புத்தகத்தில் இடம்பெற இதனை விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com