"இது ரோடா இல்ல குளமா..?" போராட்டத்தில் குதித்த தனி ஒருவன் - தீயாய் பரவும் வீடியோ

x

பழுதடைந்த ரோட்டில் தேங்கி நின்ற சேற்று நீரில் நீச்சல் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் எம்ஜிஆர் நகர், பழ தோட்டம், இந்திரா நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் ‌இதனை சரி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் நூதனமான முறையில் ராதாகிருஷ்ணன் படுத்துக்கொண்டும்,நீச்சல் அடித்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்