மதுரை சித்திரை திருவிழாவில் இப்படியொரு நெகிழ்ச்சி சம்பவமா?

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் செய்யப்பட்டது. இதில், முக்கிய நிகழ்வான பூப்பல்லக்கின்போது கையில் பணம் இருந்தும் சாப்பிட கடைகள் இல்லாமல் தவித்த வெளியூர் பக்தர்கள், திருவிழாவில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தொடர் அன்னதானமாக, அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. கள்ளழகரை பார்க்க வந்த பக்தர்கள் பலரும், அன்னதான உணவை சாப்பிட்டு பசியாற்றினர். ஒவ்வொரு ஆண்டைப் போல, இந்தாண்டும் ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார், தனியார் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கமலக்கண்ணன்..

X

Thanthi TV
www.thanthitv.com