இதிலும் ஒற்றுமையா..? +2வில் ஒரே மார்க்... அசத்திய இரட்டை சகோதரிகள்

x

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். திருநாகேஸ்வரம் வடக்கு வீதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாதவி தம்பதியரின் இரட்டை மகள்களான ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருவரும் ஒரே மாதிரியாக 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்