"ஞாயிறன்று ஊரடங்கா?'' - தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு வெளியிட்ட முக்கிய பதிவு

x

தமிழ்நாட்டில் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் உண்மை கிடையாது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என்றும், இது 2022ம் ஆண்டு அளித்த பேட்டி என்றும், தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்