திருச்செந்தூர் கோயிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்தா? - விளக்கம்

x

100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - வதந்தி - கோவில் நிர்வாகம் விளக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக பரவிய வதந்தி குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக கடந்த வாரம் சனி கிழமை மட்டும் முருகன் கோவிலில் 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை ரத்து செய்யப்பட்டு, அதே வரிசை பொது தரிசன வரிசையாக மாற்றி பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா நாட்களிலுமே 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் அன்று ஒரு நாள் மட்டும் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் விரைந்து தரிசனம் முடிக்க, பொது தரிசன வரிசையாக மாற்றினோமே தவிர, வழக்கம் போல் 100 ரூபாய் கட்டண தரிசனம் செயல்பட்டுக்கொண்டு தான் உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்