"பார்சல் கொடுக்க இவ்ளோ நேரமா.." - ஓனருக்கு விழுந்த அடி.. ரணகளமான இட்லி கடை
வேலூர் மாவட்டம் கரசமங்கலமத்தில் இட்லி பார்சல் கொடுக்க தாமதமானதால் கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லத்தேரி பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளரான சீனிவாசனின் மகன் கிருபானந்தம் பார்சல் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, இட்லி வாங்குவதற்காக வந்த சேகர் பார்சல் கொடுக்க ஏன் இவ்வளவு தாமதம் என கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற சேகர் சற்று நேரத்திற்கு பிறகு தனது மகன் உட்பட ஆட்களை அழைத்து வந்து கடையில் இருந்த கிருபானந்தத்தை கடுமையாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
