``டயலாக் பேசுனா போதுமா?'' - விஜய்யை வெளுத்து வாங்கிய ஈபிஎஸ்
சிலர் கட்சி ஆரம்பித்ததும் இமாலய சாதனையை சாதித்தது போல் டயலாக் பேசுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தில் பேசிய ஈபிஎஸ், அதிமுக யார் கையில் உள்ளது என அறியாமையில் ஒருவர் பேசுகிறார்.... இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? இவரை நம்பி இவரின் பின்னால் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும் என தெரிவித்துள்ளார். மேலும், உழைப்பை தராமல் பலனை எதிர்பார்பது எப்படி?, திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக தான் என்றார்.
Next Story
