"ஒரு பொண்ணு ICU-ல இருக்கு... இப்ப இந்த பையன் இறந்துட்டான்"... பேருந்துகளை சிறைப்பிடித்த மாணவர்கள்
சேலத்தில் தனியார் கல்லூரி வளாகம் முன்பு, பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்கலாம் என்ற மாணவர், சின்ன திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது, நிலை தடுமாறி விழுந்த அப்துல்கலாம் மீது பேருந்தின் சக்கரன் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதை கண்டித்த சக மாணவர்கள், கல்லூரி வளாகம் முன்பு கல்லூரியின் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
