கலந்தாய்வில் முறைகேடு,தீக்குளிக்க முயன்ற ஆசிரியர்
கலந்தாய்வில் முறைகேடு? - தீக்குளிக்க முயன்ற ஆசிரியர்
ராமநாதபுரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி பட்டதாரி ஆசிரியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன்கோட்டை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் சீனிவாசன் என்பவர் பணியிட மாறுதலுக்கு பலமுறை விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கலந்தாய்விலும் சீனிவாசனுக்கு மாறுதல் கொடுக்கப்படவில்லை என கூறுப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது பையில் இருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.
Next Story
