இரும்புக் குதிரை - பந்தயத்தில் புழுதி பறக்க சீறிப்பாய்ந்த பைக்குகள்

காத கிழிக்கிற சவுண்ட்.... என்ன இது?... வித்தியாசமான பந்தயமா இருக்குனு பாக்குறீங்களா?... ஆமாம்... வெளிநாடுகளில் கரடு முரடான நிலப்பரப்புகளில் நடத்தப்படும் இந்த Dirt Bike Race, நம்ம ஊர்லயும் நடந்திருக்கு...

அது எங்கனு பார்த்தீங்கன்னா, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடியில தான்....

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள கொண்டாடும் விதமா, தென்னிந்திய அளவுல நடந்த இந்த பந்தயத்துல பல்வேறு மாநிலங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகிட்டாங்க....

நேஷனல் ரைடர், எக்ஸ்பர்ட் கிளாஸ் என 16 பிரிவுகள்ல இந்த பந்தயம் நடந்துச்சு... கரடு முரடான பாதை, மேடு பள்ளம், சேறு சகதினு பந்தய களத்துல சீறிப்பாய்ஞ்ச பைக் வீரர்களை, ஏராளமான பொதுமக்கள் இரண்டு பக்கமும் நின்று ரசிச்சாங்க...

X

Thanthi TV
www.thanthitv.com